Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

Siva
செவ்வாய், 10 ஜூன் 2025 (14:24 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்யா மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் உக்ரைன் நாடு ஈடுபட்ட நிலையில், அவற்றில் ஒரு முக்கிய ஏவுகணை ஜெர்மனியின் IRIS-T என்பதாகும். இந்த ஏவுகணையைத்தான் இந்தியாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க பாகிஸ்தான் நாடு முயற்சி செய்வதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
அதேபோல், இத்தாலி நாட்டின் CAMM-ER ஏவுகணையையும் பாகிஸ்தான் வாங்க முடிவு செய்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் சமீபத்தில் தான் இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையை ஜெர்மனி எடுக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
 
 பாகிஸ்தானுக்கு ஆயுதம் விற்பதற்காக இந்தியாவை ஜெர்மனி பகைத்துக் கொள்ளாது என்றுதான் ஜெர்மனியின் வட்டாரங்கள் கூறுகின்றன. அதேபோல், இத்தாலியும் இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்றாக இருப்பதால் பாகிஸ்தானுக்கு ஆயுதம் விற்பனை செய்ய இத்தாலி விரும்பாது என்று கூறப்பட்டு வருகிறது. 
 
சீனாவில் இருந்து வாங்கிய ஏவுகணைகள் இந்தியாவுக்கு எதிரான தாக்குதலின் போது தோல்வி அடைந்த நிலையில், வேறு எந்த நாட்டில் இருந்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வாங்கலாம் என்பது குறித்து பாகிஸ்தான் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments