Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய விமானப்படை மீது எஃப்.ஐ.ஆர் – பாகிஸ்தான் நக்கல் !

Webdunia
சனி, 9 மார்ச் 2019 (11:12 IST)
பாலகோட் பகுதியில் இந்தியவிமானிகள் நடத்திய தாக்குதலில் மரங்கள் அழிந்துவிட்டதாக பாகிஸ்தான் அரசு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

கடந்த மாதம் ஜெய்ஷ் இ முகமது எனும் அமைப்பு இந்திய ராணுவ வீரர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. அதில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரனமடைந்தனர். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானில் இருந்த தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் 350 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்திய அரசு தெரிவித்தது.

ஆனால் இதைப் பாகிஸ்தான் அரசு இதை மறுத்தது. தாக்குதலில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்றும் மரங்கள் மட்டுமே அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது. சர்வதேச ஊடகங்களும் பாகிஸ்தானில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என செய்தி வெளியிட்டன. இதனால் இந்திய அரசு மீது விமர்சனங்கள் எழுந்தன.

அதையடுத்து இந்திய அரசை மீண்டும் சீண்டும் விதமாக தங்கள் நாட்டு மரங்களை குண்டுவீசி அழித்துவிட்டதாக பாகிஸ்தான் அரசு இந்திய விமானப்படை மீத்ய் எப்.ஐ.ஆர்.ஐ பதிவு செய்துள்ளது. அந்த முதல் தகவல் அறிக்கையில் ’  இந்திய விமானப்படையின் விமானங்கள் குண்டு வீசியதில் 19 பைன் மரங்கள் அழிக்கப்பட்டதாகவும், குண்டுவீசிச் சென்ற விமானிகள் யார் என்பது குறித்து அடையாளம் காணப்படவில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments