Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொர்க்க பூமி: அமெரிக்கா விமர்சனம்

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2014 (16:43 IST)
தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குவதாக அமெரிக்காவின் பெண்டகன் செய்தித்துறை செயலாளரான அட்மிரல் ஜான் கிர்பி கூறியுள்ளார்.
 
எனினும் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி அவர்களை அழித்து வருவதாகவும் கிர்பி சுட்டிக்காட்டினார்.
 
இந்த தீவிரவாதிகளால்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அமைதியை இழந்து தவிக்கின்றது என்று அவர் கூறியுள்ளார். நீண்ட காலமாக தீவிரவாதிகள் மீது தாக்குதலை நடத்தாமல் இருந்த பாகிஸ்தான் ராணுவம் கடந்த கோடை காலம் முதல்தான் அவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியதாகவும் கிர்பி தெரிவித்தார்.
 
பொது வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கும் இத்தகைய தீவிரவாதிகள் மீதான தாக்குதல் தொடரவேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும், அதையொட்டி பாகிஸ்தானுடன் தாங்கள் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் கிர்பி கூறினார்.
 
தங்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே தற்போது சமூக உறவு நிலவுவதாகவும் கிர்பி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments