பிறந்த மறுநாளே கொரோனா வைரஸ்: சீனாவில் பெரும் பரபரப்பு

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (20:30 IST)
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் வெகுவாக பரவி அந்நாட்டு மக்களை கொன்று வருகிறது. சீனா மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் இந்தியா உள்பட வெளிநாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்பதால் உலக நாடுகளே இந்த கொரோனா வைரசால் அச்சத்தில் உள்ளன
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் முதல் முதலாக பரவ ஆரம்பித்த சீனாவின் வூகான் மாகாணத்தில் நேற்று பிறந்த குழந்தை ஒன்றுக்கு இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது 
 
அந்த குழந்தையின் தாய் கர்ப்பமாக இருக்கும் போதே கொரோனா வைரஸ் அவருக்கு தாக்கியதாகவும் இதனையடுத்து அந்த வைரஸ் குழந்தைக்கும் பரவியதாகவும் கூறப்படுகிறது இதனை அடுத்து குழந்தைக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது 
 
பிறந்த மறுநாளே கொரோனா வைரசுக்கு ஒரு பச்சிளங்குழந்தை தாக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments