Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரப்புடனான பேச்சுவார்த்தை - சிங்கப்பூர் வந்தடைந்த வட கொரியா அதிபர் கிம் ஜாங்

Webdunia
ஞாயிறு, 10 ஜூன் 2018 (15:21 IST)
ஆயுத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச சிங்கப்பூருக்கு வந்தடைந்தார் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்.
அமெரிக்காவும் வடகொரியாவும் அணு ஆயுத கொள்கை விஷயத்தில் மோதிக்கொண்டதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருந்தது. இதன் பின்னர் சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் உன் தனது போக்கை மாற்றிக்கொண்டு டிரம்பை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.
 
இதனையடுத்து, இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் வரும் ஜூன் 12ஆம் தேதி நேரில் சந்திக்க இருந்தனர். இந்த சந்திப்பின்போது தான் தென்கொரியர்களால் கொல்லப்படலாம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் தெரிவித்திருந்தார். 
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் பியாங்யாங் நகரில் இருந்து  இன்று சிங்கப்பூர் வந்தடைந்தார்.  இந்த சந்திப்பு நடக்கவுள்ள செண்டோசா ரிசார்ட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments