Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு பெற்றார் ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2014 (13:18 IST)
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையராக பதவி வகித்த நவநீதம் பிள்ளை அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன் என்று நவநீதம் பிள்ளை கூறியுள்ளார். இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஐ.நா.விசாரணை குழு தொடர்ந்து ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நவநீதம் பிள்ளை 1967 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் நட்டால் மாகாணத்தின் முதலாவது பெண் சட்டத்தரணியாக அவர் பணியாற்றத் தொடங்கினார்.

பின்னர் 1982ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுகலை பட்டம் பெற்று 1988 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.

2003 ஆம் ஆண்டு அவருக்கு பெண்கள் உரிமைக்கான முதலாவது குரூபர் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments