Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் நேட்டோ; உக்ரைனுக்கு அழைப்பு! – கடுப்பில் ரஷ்யா!

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (11:49 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் நேட்டோ மாநாட்டிற்கு உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் முன்னதாக நேட்டோ அமைப்பில் இணையவிருந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடர்ந்தது. கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த போரினால் உக்ரைனின் பல பகுதிகள் நாசமாகியுள்ளன. மக்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஸ்பெயினில் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அழைப்பு விடுத்துள்ளது நேட்டோ. ஏற்கனவே ரஷ்யா போர் தொடர்ந்துள்ளதற்கு உக்ரைன் நேட்டோவில் இணைய உள்ளது முக்கிய காரணமாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த அழைப்பு ரஷ்யாவை மேலும் உக்கிரமடைய செய்யும் என்றும், போர் வேகமடையும் என்றும் அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியன் வன்கொடுமை: இன்ஸ்டா நண்பரால் விபரீதம்..!

ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் ரெட்டி ஆடம்பர பங்களா.. வீடியோ பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி..!

சித்திரையில் பிறந்தால் கெட்ட சகுனம்..? மூடநம்பிக்கையில் குழந்தையை கொன்ற தாத்தா!

நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள்; 2026ல் எங்களுக்கே வெற்றி: டிடிவி தினகரன் பேட்டி

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments