Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பிய விண்வெளி வாகனம் அதிக தூரம் பயணம் செய்து சாதனை

செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பிய விண்வெளி வாகனம் அதிக தூரம் பயணம் செய்து சாதனை
, செவ்வாய், 29 ஜூலை 2014 (18:21 IST)
நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய விண்வெளி வாகனம், இதுவரை அனுப்பட்ட விண்கலங்களிலேயே அதிக தூரம் பயணம் செய்து சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்துக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு சூரிய ஒளிசக்தியில் இயங்கும் ரோபோவுடன் கூடிய விண்வெளி வாகனத்தை அனுப்பி வைத்தது.
 
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா என ஆய்வு மேற்கொள்ள இது அனுப்பப்பட்டது. தற்போது அந்த விண்வெளி வாகனம் 40 கிலோ மீட்டர் (25 மைல்) பயணம் செய்து சாதனை படைத்துள்ளது. தற்போது இது செவ்வாய் கிரத்தில் என்டீவர் எரிமலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
 
இது ஒரு மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது. சோவியத் ரஷ்யா சந்திரனுக்கு லுனோக்காட்–2 என்ற ஊர்தியை விண்கலம் மூலம் அனுப்பியது. அது கடந்த 1973 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி அங்கு தரை இறங்கியது.
 
அங்கு 5 மாதத்துக்கும் குறைவாக 39 கிலோ மீட்டர் தூரம் (24.2 மைல்) பயணம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டது. அதுவே மிகப்பெரும் சாதனையாக இதுவரை கருதப்பட்டது.
 
தற்போது அதன் சாதனை முறியடிக்கப்பட்டு விட்டதாக நாசா விஞ்ஞானிகள் பெருமிதம் அடைந்துள்ளனர். இந்த வாகனம் இவ்வளவு தூரம் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. 1 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே பயணம் செய்ய வடிவமைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil