Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் லேண்டரின் புகைப்படங்களை இன்று வெளியிடும் நாசா! மீட்க வழி உண்டா?

Webdunia
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (07:25 IST)
இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டரில் இருந்து இன்னும் தகவல் தொடர்பு கிடைக்காத நிலையில் நிலவை சுற்றி வரும் நாசாவின் ஆர்ப்பிட்டர் விக்ரம்லேண்டரை எடுத்த புகைப்படத்தை இன்று நாசா வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
 
விக்ரம் லேண்டரின் நிலை என்ன என்பதை துல்லியமாக படமெடுக்க நாசாவின் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டர் அருகே நகர்த்தப்பட்டது. இந்த ஆர்பிட்டரில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இன்று நாசாவுக்கு கிடைக்கும் என்றும் அதனையடுத்து நாசா அந்த புகைப்படங்களை இன்று வெளியிடவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 
இந்த புகைப்படத்தின் மூலம் விக்ரம் லேண்டரின் நிலை என்ன? என்பது துல்லியமாக கண்டுபிடிப்பது மட்டுமின்றி லேண்டருடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் திட்டத்திற்கும் இது உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. 
 
 
நாசாவின் உதவியுடன் விக்ரம் லேண்டரின் நிலைமையை கண்டறிய இஸ்ரோ விஞ்ஞானிகள் முயன்று வரும் நிலையில் இந்த புகைப்படத்தின் உதவியால் விக்ரம் லேண்டருக்கு ஏற்பட்ட பாதிப்பை கண்டறிந்து அதனை சரிசெய்தால் மீண்டும் விக்ரம் லேண்டர் செயல்பட வாய்ப்புகள் அதிகம் என கருதப்படுகிறது. எனவே இன்று நாசா வெளியிடும் புகைப்படத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்..

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments