விண்கல்லை அடிச்சு தூக்கிய நாசா விண்கலம்! – வைரலாகும் வீடியோ!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (09:59 IST)
விண்கல்லை தாக்கி அதன் பாதையை மாற்றும் முயற்சியில் நாசா விண்கலம் விண்கல்லை துல்லியமாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

விண்வெளி ஆய்வில் உலகின் பல நாட்டு விண்வெளி ஆய்வு மையங்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் அவற்றில் முன்னணியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் இருந்து வருகிறது. சமீபத்தில் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பை விண்ணுக்கு அனுப்பி ஆய்வு செய்து வரும் நாசா மற்றொரு பக்கம் விண்கற்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறது.

விண்வெளியில் பயணிக்கும் பல விண்கற்கள் பூமியை நோக்கிய பாதையில் பயணிப்பதும், இதனால் அவ்வபோது பூமிக்கு அபாயம் விண்கற்களால் நேருமா என்பது குறித்தும் ஆய்வாளர்கள் கணித்து வருகின்றனர். அடுத்த சில ஆண்டுகளுக்கு பூமிக்கு விண்கற்களால் ஆபத்து இல்லை என்றாலும், எதிர்காலத்தில் அப்படியான நிலை ஏற்படலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நாசா இறங்கியுள்ளது.


அதற்கான புதிய திட்டம்தான் DART Mission (Double Asteroid Redirection Test). அதன்படி நாசா தயாரித்துள்ள டார்ட் விண்கலம் ‘Dimorphos’ என்னும் விண்கல் ஒன்றின் மீது மோதி தாக்க திட்டமிடப்பட்டது. விண்கலத்தால் மோதி விண்கல்லின் பாதையை மாற்றுவது நாசாவின் திட்டமாகும்.

இந்த திட்டத்திற்காக டார்ட் விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. நிலவை விட இரண்டு மடங்கு தொலைவில் உள்ள டிமொர்போஸ் விண்கல்லை நோக்கி பயணித்த டார்ட் விண்கலம் இந்திய நேரப்படி இன்று காலை 3 மணியளவில் டிமொர்போஸை வெற்றிகரமாக தாக்கியது. இந்த தகவலை உறுதிபடுத்திய நாசா, டார்ட் விண்கல்லை தாக்கிய வீடியோவையும் வெளியிட்டுள்ளது. நாசாவின் இந்த வெற்றி எதிர்காலத்தில் மிகப்பெரும் பலனை தரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments