Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பல கோடிக்கு’ ஏலம் போன கிண்ணம்.. தம்பதியர்க்கு அடித்த அதிர்ஷ்டம் !

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (16:59 IST)
இன்றைய காலத்தில் செய்யப்படும் பொருள்கள் எதுவும், அதிக தொகைக்கு விற்கப்படுகிறதோ, இல்லையோ ஆனால் அந்தக் காலத்தில் செய்யப்பட்ட பொருள்கள் எல்லாம் பொக்கிஷமாகவே கருதப்படுகிறது. அதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அதனால் எவ்வளவு விலை கொடுத்து வாங்கவும் மக்கள் தயாராக உள்ளனர்.
அதேபோல் ஒரு சம்பவம் சுவிட்ஸர்லாந்து நாட்டில் நடந்துள்ளது. ஆம் ! சுவிட்சர்லாந்து நாட்டில் கொல்லெர் என்ற ஏல நிறுவனம் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கிண்ணத்தை ரூ. 34 கோடியே 12 லட்சத்துக்கு 46 ஆயிரத்துக்கு ஏலம் விட்டது.
 
இந்தக் கிண்ணத்தில் அப்படி என்ன உள்ளது என்றால்... சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியர் ஒருமுறை சீனாவுக்குச் சென்றனர். அப்போது அங்குள்ள பழம்பொருள் கடையில் ஒரு கிண்ணத்தை வாங்கியுள்ளனர். அழகிய பிரமிக்க வைக்கும் வேலைப்பாடுகள் கொண்ட அந்த கிண்ணம் 17 ஆண் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிந்த பின், அதை நல்லவிலைக்கு விற்க முடிவுசெய்தனர்.
 
அதன்படி, கொல்கெர் என்ற நிறுவனம், அந்த கிண்ணத்தை வாங்கி விற்க முடிவுசெய்தது. இதனையடுத்து கிண்ணத்தை ஹாங்காங் கொண்டு சென்ற நிறுவனம், அதை ஏலம் விட்டது. அதன் தொகை சுவிட்சர்லாந்து மதிப்பில் 4.8 மில்லியன் சுவிஸ் பிராங்க்  ஆகும்,. இந்திய மதிப்பில் சொல்வது என்றால் ரூ. 34 கோடியே 12 லட்சத்து 46 ஆயிரம்  ஆகும். 
 
சுவிட்சர்லாந்து தம்பதியினருக்கு அதிர்ஷ்டம் அவர்கள் வீட்டுக் கூரையைப் பிய்த்துக்கொண்டு அடித்ததாக பலரும் பேசி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள கழிவு விவகாரம் எதிரொலி; குப்பை கொட்டுபவர்கள் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு!

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் வழக்கு..!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை எதிரொலி: பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்..!

உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்! போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு முன் புதின் செய்யும் வேலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments