Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகனை நாய் போல் கழுத்தில் கயிறு கட்டி பேஸ்புக்கில் வெளியிட்ட தாய்

Webdunia
புதன், 27 மே 2015 (21:07 IST)
ஒரு தாய் தனது மகனை நாய் போல கழுத்தில் கயிறு கட்டி நடத்தியதை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.
 

 
பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரனி என்ற பகுதியை சேர்ந்த தாய் ஒருவர் தனது ஒன்றரை வயதான மகனை நாயின் கழுத்தில் கயிறு கட்டி வைப்பது போல பாவித்தும், நாய்க்கு உணவு வழங்கப்படுவது போல, அவனுக்கு ஒரு கிண்ணத்தில் உணவு அளிப்பது போலவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்தினை பகிர்ந்தார்.
 
இது குறித்து கருத்து தெரிவித்த சமூக நல செயலாளர் கூறுகையில், “அது வேடிக்கைக்காக செய்யப்பட்டது என்றாலும் கூட, அது மோசமான செயலாகும். ஏனென்றால் இது வேடிக்காகத்தான் செய்யப்பட்டது என்று அந்த குழந்தைக்கு தெரியாது. பொம்மையை போல குழந்தைகளை நடத்த யாருக்கும் உரிமை கிடையாது. அப்படி யாரேனும் செய்தால் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.
 
இது அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் அந்நாட்டின் குழந்தைகள் நல அமைப்பின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர்கள், அந்த குழந்தைய தங்களின் கண்காணிப்பில் எடுத்துக் கொண்டுள்ளனர்.
 

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண் கொண்ட ஒன்றரை லட்சம் மொபைல் ஃபோன்கள் - மோசடியின் பின்னணி என்ன?

மேகதாது அணை விவகாரம்.! மத்திய அமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்..!!

தமிழகத்தில் இன்னொரு இடைத்தேர்தலா? லால்குடி எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய போவதாக தகவல்..!

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

Show comments