Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.. இதுதான் குரங்கு சேட்டையா? செல்போனை திருடி செல்பி எடுத்த குரங்குகள்!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (09:25 IST)
மலேசியாவில் திருடப்பட்டு சில காலம் கழித்து கிடைத்த செல்போனில் முழுவதும் குரங்குகளின் படங்களும், வீடியோக்களும் உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் சாக்ரிட்ஸ் ரோட்ஸி என்பவர் உறங்கி கொண்டிருந்தபோது அவரது செல்போன் காணாமல் போயுள்ளது. சில நாட்கள் கழித்து தனது வீட்டின் அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் அவருக்கு மீண்டும் அவரது போன் கிடைத்துள்ளது.

அதை எடுத்து கேலரியில் பார்த்தபோது முழுவதும் குரங்குகளின் புகைப்படங்களும், வீடியோக்களும் இருந்துள்ளன, சில குரங்குகள் செல்போனை கடிக்க முயற்சிக்கும் செல்பிக்களும் அதில் இருந்துள்ளன. குரங்குகள்தான் செல்போனை திருடி கொண்டு சென்று விளையாடியுள்ளன என்றும், அப்போது தவறுதலாக கேமரா ஆன் ஆனதால் இந்த காட்சிகள் பதிவானதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலையில் கனமழை: பக்தர்கள் கூட்டம் குறைந்ததாக தகவல்..!

ஃபெங்கல் புயல்: விழுப்புரம், திருவண்ணாமலையில் கனமழை.. வீடுகள் இடிந்தன..!

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை?

கனமழை எதிரொலி: தமிழகத்தில் இன்று ரயில்கள் ரத்து குறித்த முழு விவரங்கள்..!

இன்று காலை 10 மணிக்குள் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments