Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்டிஷ் ராஜ குடும்ப மோசமான நடவடிக்கையை உடைத்த ஹாரி - மேகன் மார்க்கல் !

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (09:01 IST)
பிரிட்டிஷ் ராஜ குடும்பத்திற்கு எதிராக ஹாரி மற்றும் அவரது மனைவி  மேகன் மார்க்கல் பேட்டியளித்திருப்பது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

 
அந்த பேட்டியில், ராஜ குடும்பத்தில் இருந்த போது எனக்கு தற்கொலை உணர்வுகள் அதிகம் இருந்தது. குடும்ப சூழ்நிலை காரணமாகவும், அங்கு நான் நடத்தப்பட்ட விதம் காரணமாகவும் எனக்கு தற்கொலை உணர்வு அதிகரித்தது. இதை இப்போது சொல்ல கஷ்டமாக இருக்கிறது.
 
அங்கு எனக்கான அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டது. ராஜ குடும்பத்தில் என்னிடம் நிற பாகுபாடு காட்டப்பட்டது. என் குழந்தை கருப்பாக இருக்குமோ என்று அச்சப்பட்டனர். என் குழந்தை கருப்பாக பிறந்து விட கூடாது என்பதற்காக தீவிரமாக முயற்சி செய்தனர்.
 
என் குழந்தைக்கு பட்டத்து உரிமையும் கூட கிடைக்கவில்லை. என் குழந்தை பிறக்கும் முன்பே பட்டத்து உரிமை கிடைக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். என் குழந்தையின் நிறம்தான் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
 
டயானாவிற்கு ஏற்பட்டது போலவே எங்களுக்கும் அழுத்தங்கள் வந்தது. டயானா எங்களுக்காக விட்டு சென்ற பணத்தைதான் நாங்கள் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம் என்று மேகன் - ஹாரி தெரிவித்துள்ளனர். இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம். முதல்வர் உத்தரவு..!

கும்பமேளா கும்பலால் வாரணாசியில் சிக்கிய தமிழக வீரர்கள்! உதயநிதி எடுத்த உடனடி நடவடிக்கை!

கொசுவை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் சன்மானம்! - பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments