அடைகாத்து கோழி குஞ்சுகளை பொரிய வைத்த அதிசய நபர்...

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2017 (15:54 IST)
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் 3 வாரங்களாக கோழி முட்டைகளை அடைகாத்து, கோழி முட்டைகளை பொரித்து, குஞ்சுகளைப் பொரித்து சாதனைப் படைத்துள்ளார்.


 

 
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் ஆப்ரஹாம் பாய்ன்செவல் என்பவர் தனது வித்தியாசமான நடவடிக்கைகளால் மக்களை கவர்ந்து வருபவர் ஆவார். அவர் சமீபத்தில் ஒரு புதிய செயலை சாதித்துக் காட்டியுள்ளார். 
 
அதாவது, கோழி முட்டைகளை கோழிகள் அடைகாத்து, குஞ்சு பொரிப்பது போல், தானும் அடைகாத்து கோழிக்குஞ்சுகளை பொரிக்க வைக்க வேண்டும் என முடிவெடுத்தார்.
 
அதன் படி, பாரிசிஸ் உள்ள ஒரு கண்காட்சியகத்தில் உள்ள கண்ணாடி  அறையில் மூன்று வாரங்களாக அமர்ந்திருந்து, மொத்தம் 9 முட்டைகளை அடைகாத்தார்.  அந்த 3 வாரங்களும், உடலில் வெப்ப நிலையை அதிகரிக்கும் உணவுகளை மட்டுமே அவர் மேற்கொண்டார். 
 
இதன் விளையாவாக அந்த 9 முட்டைகளில் இருந்தும் குஞ்சு வெளியே வந்தது. தான் அடைகாத்து பொரிய வைத்த குஞ்சுகளை தனது பண்ணையிலேயே வளர்க்க விரும்புவதாக கூறியுள்ளார். ஆனால், இயற்கைக்கு மாறாக ஆப்ரகாம் செயல்பட்டு வருவதாக பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments