Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 வயது மகளை பலாத்காரம் செய்த அப்பாவுக்கு 12000 ஆண்டுகள் சிறை?

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (05:55 IST)
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களே கொடுமையானது என்று இருக்கும் நிலையில் பெண்களுக்கு பெற்ற தந்தையே பாலியல் தொந்தரவு கொடுப்பது என்பது சகிக்க முடியாத கொடுமை என்று கூறியுள்ள மலேசிய நீதிமன்ற வட்டாரங்கள் இப்படிப்பட்ட நபருக்கு 12000 ஆண்டுகள் கூட சிறைத்தண்டனை விதிக்கலாம் என்று கருத்து கூறியுள்ளது.



 
 
மலேசியாவை சேர்ந்த விவாகரத்து ஆன ஒருவர் 15 வயதே ஆன தனது சொந்த மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து தெரியவந்தவுடன் அவருடைய முன்னாள் மனைவி நீதிமன்றத்தை அணுகி தனது மகளை மீட்டுத்தருமாறு வழக்கு தொடர்ந்தார்.
 
இதுகுறித்த விசாரணை நடந்தபோது அவர் மீது 626 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 12000 ஆண்டுகளுக்கும் அதிகமாக வருடங்கள் சிறைத்தண்டனை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்......??? விஜய்க்கு கேள்வி எழுப்பிய தமிழிசை

அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து பேசக்கூடாது: ரங்கராஜன் நரசிம்மனுக்கு, நிபந்தனை ஜாமீன்..!

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து: சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

5 மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்