Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயமான மலேசிய விமானம் பிலிப்பைன்ஸ் தீவில் எலும்புக்கூடுகளுடன் கண்டுபிடிப்பு?

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (12:33 IST)
தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள மின்டானோ தீவில் கடற்கரையோரமாக அமைந்துள்ள காட்டுப்பகுதியில் மலேசிய நாட்டு கொடி வரையப்பட்ட நிலையில் ஒரு விமானத்தின் பாகம் கண்டறியப்பட்டுள்ளது.

தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள மின்டானோ தீவில் தெற்கு உபியான் டாவி-டாவி என்ற இடத்தின் அருகே கடற்கரையோரமாக அமைந்துள்ள காட்டுப்பகுதியில் 70 அங்குல நீளமும், 35 அங்குல அகலமும் கொண்ட மலேசிய நாட்டுக் கொடியுடன் கூடிய எலும்புக்கூடுகளுடன் ஒரு விமானத்தின் பாகம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விமானம் சென்ற வருடம் மார்ச் மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் சீன தலைநகர் பெய்ஜிங்க் சென்ற போது கடலில் விழுந்து மாயமான விமானமா என்று சந்தேகிக்கப்படுகிறது

மாயமான மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தாலும் அந்த விமானத்தின் பாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் பிலிப்பைன்ஸ் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த விமான பாகத்தில் பல எலும்புக்கூடுகள் இருப்பதாகவும், சீட் பெல்ட்டுடன் விமானி எலும்புக்கூடாக இருக்கையில் அமர்ந்திருப்பதாகவும் கூறப்படுவதால் இது கடந்த வருடம் மாயமான மலேசிய விமானமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த விமான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை மலேசியா நாட்டில் உள்ள சபா மாகாண காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளூர் விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் தகவல் பரிமாறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு அவர்களுக்கு மலேசிய நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவுருத்தியுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments