Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலையை மணந்து கொண்ட நகராட்சி மேயர் [வீடியோ]

Webdunia
சனி, 4 ஜூலை 2015 (17:47 IST)
மீனவர்களின் நலனுக்காக மெக்சிகோ நாட்டு நகர மேயர் ஒருவர் முதலையை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 
மெக்சிகோவின் கடற்பகுதியில், ஆண்டுதோறும் இத்தகைய திருமணம் நடப்பது வழக்கம். இத்தகைய திருமணத்தால், ஆண்டு முழுவதும் ஏராளமான மீன்கள், இறால் மற்றும் கடல் உணவுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை அப்பகுதி மீனவர்களிடம் உள்ளது. 
 
அதன்படி, கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற விழாவில், அந்நகர மேயரான, ஜோல் வாஷ்க்யூஸ் ரோஜாசுக்கும், மரியா இசபெல் என்னும் முதலைக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன், முதலைக்கு ஞானஸ்நானம் செய்யப்பட்டு, மணப்பெண் போன்று வெள்ளை கவுன் அணிவிக்கப்பட்டது.
 
கிறிஸ்தவ முறைப்படி, அனைத்து திருமண சடங்குகளும் செய்யப்பட்டன. இந்த திருமணத்தில், நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின் நடந்த விருந்தில், மேயருடன், முதலை நடனம் ஆடியது. மேயருக்கும், முதலைக்கும் நடந்த திருமணத்தில், மேயரின் மனைவி மற்றும் மகன் கலந்து கொண்டனர்.

வீடியோ:
 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!