Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்டி போட்ட பனிப்பாறை: 50 ஆண்டுகால புதுமை!!

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (10:38 IST)
அமெரி எனும் பனியடுக்குப் பாறையில் இருந்து புதிதாக பனிப்பாறை ஒன்று பிறந்திருப்பதி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆம், அண்டார்டிக்காவில் உள்ள அமெரி பனியடுக்குப் பாறையில் இருந்து 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று பிறந்துள்ளது. பனிப்பாறை குட்டி போடுமா என வியக்க வேண்டாம். இது குறித்த முழு விவரம் இதோ... 
 
பனியடுக்கின் மேற்பகுதிகளில் அடுத்தடுத்து பனிப்பொழிவு ஏற்பட்டு அதன் அளவு பெருக்கும் போது அதன் கீழ்ப் பகுதியில் ஒரு பெரும் பாறை பிரிந்து சென்று பெருங்கடலில் சேரும் நிகழ்வே பனியடுக்குப் பாறை குட்டி போடுதல் அல்லது ஆங்கிலத்தில் கால்விங் என்று அழைக்கப்படுகிறது.
தற்போது இந்த முறையில்தான் அமெரி பனியடுக்குப் பாறையில் இருந்து புதிய பனிப்பாறை பிறந்துள்ளது. இதில் அதிசயம் என்னெவெனில் அமெரி 1960-களுக்குப் பிறகு பிரிந்து உரிவாகிய பாறைகளில் இது மிகப்பெரியது. 
 
அன்டார்டிக்காவில் உள்ள மூன்றாவது பெரிய பனி அடுக்குப் பாறை அமெரி ஆகும். தற்போது இதன் குட்டிக்கு டி28 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments