Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்ட ஜாக் மா - முதலிடத்தில் ஜூ ஜியாயின்

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (12:53 IST)
அலிபாபா நிறுவனர் ஜாக் மா, சீனாவின்  நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்தை இழந்துள்ளார். அவர் சீனாவின்  ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் ஜு ஜியாயின் என்பவரிடம் இழந்தார்.

போர்ப்ஸ் இதழ் வருடம் தோறும் உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தாண்டு வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் சீனாவின் ஆன்லைன் வர்த்தக ஜாம்பவான் ஜாக் மாவை பின்னுக்குத் தள்ளியுள்ளார் சீனாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் ஜூ ஜியாயின். இவர் உலக அளவில் பணக்காரர்கள் பட்டியலில் 20-ஆம் இடத்தில் உள்ளார்.இதுநாள் வரி  சீனாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்தை வகித்து வந்த ஜாக் மா, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 21ம் இடத்தில் உள்ளார். இதன் மூலம் சீனாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்தை ஜாக்மா இழந்தார்.

ஜூ ஜியாயின் சொத்து மதிப்புகள் குறைவுதான் என்றாலும், அவரது எவர்கிராண்ட் என்ற நிறுவனத்தின் பங்கு விலைகள் நம்ப முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளதால் அவரால் நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்தைப் பிடிக்க முடிந்துள்ளது.

ஜூ ஜியாயின் சொத்து மதிப்பு 36.7 பில்லியன் டாலர் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஜாக் மாவின் சொத்து மதிப்பு  35.4 பில்லியன் டாலராக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments