Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நபருக்கு ஒரே நேரத்தில் குரங்கம்மை, கொரோனா மற்றும் HIV!? – இத்தாலியில் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (08:54 IST)
இத்தாலியை சேர்ந்த நபர் ஒருவருக்கு ஒரே சமயத்தில் 3 வகையான நோய் பாதிப்புகளும் ஏற்படுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதையும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு வகையான நோய்கள் தாக்கி மக்களை கதிகலங்க செய்கின்றன. 2000களின் தொடக்கத்தில் ஹெச்ஐவி எயிட்ஸ் உலகை உலுக்கி வந்தது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று மனித குலத்தை வாட்டி வந்தது. அது குறைய தொடங்கியுள்ள நிலையில் தற்போது குரங்கம்மை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இத்தாலி நாட்டை சேர்ந்த 36 வயதான ஒருவருக்கு மேற்சொன்ன மூன்று பாதிப்புகளும் ஒரே சமயத்தில் ஏற்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் கொரோனா, குரங்கம்மை மற்றும் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு இத்தாலியில் உள்ள கடானியா சான் மார்கோ பல்கலைகழக மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறாக மூன்று பெரிய தொற்றுகள் ஒருவரை ஒரே சமயத்தில் தாக்கியுள்ளது இத்தாலியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments