Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலிகளின் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவை ராணுவம்தான் சுட்டுக்கொன்றது - ஐ.நா. அறிக்கை

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (17:53 IST)
விடுதலைப் புலிகளின் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவை இலங்கை ராணுவம்தான் சுட்டுக்கொன்றது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அறிக்கை குற்றம்சாட்டி உள்ளது.
 

 
இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல் 4 என்ற தொலைக்காட்சி நிறுவனம், விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா [27] என்பவரை இலங்கை ராணுவத்தால் சித்ரவதை செய்து சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோவை வெளியிட்டது.
 
இந்நிலையில் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கையை ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கடந்த வாரம் வெளியிட்டது.
 
அந்த அறிக்கையில், ”இசைப்பிரியாவை 2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவம் உயிருடன் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஏராளமான வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில், இலங்கை ராணுவத்தினர் அவர் போர்த்திக் கொள்ள மேலாடை ஒன்றை கொடுத்ததும் அதில் இடம் பெற்றுள்ளது.
 
இசைப்பிரியா உட்கார வைக்கப்பட்ட புகைப்படமும், அதேபோல் இசைப்பிரியா உயிரிழந்த நிலையில் சடலமாக கிடக்கும் வீடியோ, புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. இதில் அவருடைய உடல் உறுப்புகள் வெளியே தெரியும் வகையில் உடைகள் திட்டமிட்டே விலக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன.
 
இவற்றை தடயவியல் துறையினர் ஆராய்ந்தபோது இலங்கை ராணுவத்தால் இசைப்பிரியா உயிருடன் பிடிக்கப்பட்டு தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முடிவுக்கு வந்தது இழுபறி.. நாளை முதல்வராக பதவியேற்கிறார் பட்னாவிஸ்..!

புத்தகத் திருவிழாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! என்ன நடந்தது?

மழை பாதிப்பால் 10,11,12 வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு ஒத்திவைப்பா? அமைச்சர் அன்பில் மகேஷ்..!

இந்திய பிரதமர் மோடியுடன் எனக்கு கருத்துவேறுபாடு உள்ளது: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் அசாத்திய சாதனை - ஒரே மாதத்தில் 15.23 லட்சம் மரக்கன்றுகள் நடவு!

Show comments