Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

Siva
திங்கள், 20 மே 2024 (07:59 IST)
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை அடுத்து 12 மணி நேரமாக மீட்பு பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடந்தும் இதுவரை முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் போருக்கு இடையே திடீரென  ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட நிலையில் விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை ட்ரோன் உறுதி செய்தது. இருப்பினும் கடும் பனிப்பொழிவு காரணமாக மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஈரான் அதிபர் மீட்பு பணிக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவி செய்திருப்பதாகவும் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபரை கண்டுபிடிக்க மேப்பிங் சேவைகளை வழங்கும் செயற்கைக்கோளை ஐரோப்பிய ஒன்றியம் செயல்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் ஈரான் அதிபர் பயணம் செய்தாரா? என தெளிவாக தெரியவில்லை என ஊடகங்கள் செய்து வெளியிட்டு வரும் நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு ஈரான் உள்துறை அமைச்சர் விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் உடனடியாக ராணுவம் வரவழைக்கப்பட்டு மீட்பு குழுவினரிடம் இணைந்து ஈரான் அதிபரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஈரான் அதிபர் விபத்துக்குள்ளாகி அவர் என்ன ஆனார் என்பது இப்போது வரை தெரியவில்லை என்பதால் ஈரான் நாட்டு மக்கள் மத்தியில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி.மு.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

அரசு பள்ளி மாணவர்கள் எங்கள் பிள்ளை.. தாரை வார்க்க மாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியல் ஆக்குவது ஏன்? சென்னை ஐகோர்ட்

இன்னும் எத்தனை பெண்களை காவு வாங்குவீர்கள்: கைதான சௌமியா அன்புமணி ஆவேச பேட்டி..!

முகுந்தன் தான் பாமக இளைஞரணி தலைவர்! ராமதாஸ் திட்டவட்டம்! - அன்புமணி ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments