Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவால் கார்கில் போரை மறக்கமுடியாது - முஷாரப் பேச்சு!

Webdunia
திங்கள், 18 மே 2015 (11:22 IST)
இந்தியாவால் கார்கில் போரை மறக்கவே முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் பேசியுள்ளார்.
 

 
1999 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற கார்கில் போரில் மூளையாக செயல்பட்டவர் அப்போதய பாகிஸ்தானின் ராணுவ தளபதி முஷாரப் ஆவார். பின்னர் பாகிஸ்தானில் 9 ஆண்டு காலம் ராணுவ ஆட்சி நடத்திய ஆட்சி செய்த அவர் தற்போது தேசத்துரோக வழக்கை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
 
அப்போது அவர், இந்தியாவால் கார்கில் போரை மறக்கவே முடியாது என்று பேசியுள்ளார். இந்தியாவிற்கு தெரியாமலே 4 பகுதிகளில் நாங்கள், கார்கில் பகுதிக்குள் நுழைந்தோம் என்றும் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
 
பர்வேஸ் முஷாரப் தொடர்ந்து இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பது இது முதல்முறையல்ல. ஏற்கனவே வங்கதேசம் உருவாக்கியதில் இந்தியாவின் பங்களிப்புக்கு பதிலடியாகவே கார்கில் போர் நடைபெற்றது என்றும் அனைத்து முனைகளிலும் பழிக்கு பழி கொள்கைகளையே தான் நம்பியதாகவும் பர்வேஷ் முஷாரப் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Show comments