Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கொடுமை’ - 1 ரன்னில் தோல்வி!

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (07:51 IST)
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணி இடையேயான முதல் டி.20 போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது.


 


முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள், 245 ரன்கள் எடுத்து 5 விக்கெட்களை பறிகொடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அதிகபட்சமாக லீவிஸ் 100 ரன்களும், சார்லஸ் 79 ரன்களும் எடுத்திருந்தனர். பவுலிங்கில் இந்திய அணி சார்பில் பும்ராஹ் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதை தொடர்ந்து, 246 ரன்கள் என்ற அபார இலக்குடன் களம் இறங்கியது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரரான ரஹானே 7 ரன்கள் மட்டுமே எடுத்து பிரோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய விராத் கோஹ்லி 17 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். பின், கே.எல் ராகுல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 பந்துகளில் சதம் அடித்தார். அவருடன் இணைந்து ஆடிய, ரோஹித் சர்மா தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த போது அவுட்டானார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய  தோனி, கடைசி நேரத்தில் தன்னுடைய அதிரடி விளையாட்டை வெளிப்படுத்தி 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து, 1 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த போது, பிரேவோ வீசிய பந்தில் சாமுவேல்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால் இந்தியாவிற்கு எதிரான தன் முதல் டி20 வெற்றியை மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments