Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசாவில் உடனடி போர் நிறுத்தம்- அமெரிக்கா திட்டம்

Sinoj
வெள்ளி, 22 மார்ச் 2024 (15:07 IST)
இஸ்ரேல் நாட்டின்  மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் ஆண்டு  ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தியதுடன், இஸ்ரேல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து,  ராணுவவீரர்கள் மற்றும் குழந்தைகளை கொன்றனர்.
 
அதன்பின்னர், 240 பேரை பிணைக் கைதிகளாக காஸா முனைக்கு கொண்டு வந்தனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நாடு ராக்கெட் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியும் காஸா மீது உக்கிரமுடன் தாக்குதலை நடத்தி வருகிறது.
 
இந்த நிலையில்,  காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து, அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் முன் அமெரிக்க ராணுவ வீரர்  ஆரோன் புஸ்னெல்(25)தீக்குளித்தார். இந்த  சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
நாளுக்கு நாள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள், குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என இஸ்ரேல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.
 
இப்போரை  நிறுத்த அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் மூலம் பேச்சுவார்த்தை நடைபெறுகின்றன.எனவே 6 வார போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்க இஸ்ரேலிய உளவுத்துறை தலைவர் கத்தார் செல்லவுள்ளார்.
.
இப்போர் நிறுத்த காலத்தில் ஹமாஸ்பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகள் 40 பேரை விடுவிக்கவும், அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை விடுக்க  அனுமதிக்க வேண்டும் என்பது பேச்சுவார்த்தையில் முக்கியமாக இடம்பெறும். மேலும், இப்போர்  நிறுத்தத்தின்போது உணவுப் பற்றாக்குறையால் பாதுக்கப்பட்டு காசா மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்ப வழிவகுக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி, உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்புவிடுக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா; சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் சேவாக் பங்கேற்பு!

3 நாட்களில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! 6 நாட்களுக்கு மிதமான மழை! - சென்னை வானிலை ஆய்வு மையம்!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்ய பிரியா கொலை வழக்கு: நீதிபதியின் அதிரடி தீர்ப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments