Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரின் ஓரு அங்குலத்தை கூட இந்தியாவிற்கு விட்டுத்தர முடியாது: பிலாவல் பூட்டோ

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2014 (16:32 IST)
காஷ்மீரின் ஓர் அங்குலத்தை கூட இந்தியாவிற்கு விட்டுத்தர முடியாது என பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் முல்தான் நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிலாவல் பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சி விரைவில் ஆட்சியை பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அப்பொழுது காஷ்மீர் முழுவதையும் முழு கட்டுபாட்டில் கொண்டு வர உள்ளதாகவும் அவர் கூறினார்.
 
காஷ்மீர் பாகிஸ்தானின் அங்கம் என்று தெரிவித்த அவர் காஷ்மீரின் ஓரு அங்குல நிலத்தை கூட இந்தியாவிற்கு விட்டுத்தர முடியாது என்றும் கூறினார். 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக பிலாவல் மாலிக் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் அவரின் காஷ்மீர் தொடர்பான கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
பிலாவல் பூட்டாவின் தந்தை ஆஷிப்அலி சர்தாரி பாகிஸ்தான் ஜனாதிபதியாகவும் அவரது தாயார் பெனாசிர் பூட்டோ பாகிஸ்தான் பிரதமராக 2 முறையும் பதவி வகித்துள்ளனர். பிலாவல் தாத்தா ஜுல்பிக்கர் அலி பூட்டோவால் 1967 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மக்கள் கட்சி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண் கொண்ட ஒன்றரை லட்சம் மொபைல் ஃபோன்கள் - மோசடியின் பின்னணி என்ன?

மேகதாது அணை விவகாரம்.! மத்திய அமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்..!!

தமிழகத்தில் இன்னொரு இடைத்தேர்தலா? லால்குடி எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய போவதாக தகவல்..!

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

Show comments