Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (17:29 IST)
4 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது என்பதும் குறிப்பாக அமெரிக்கா இந்தியா பிரேசில் ஆகிய மூன்று நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டாலும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் அதிகமாக உள்ளது என்பதுதான் உண்மையாக உள்ளது. இந்த நிலையில் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். ஒருசில விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது
 
இந்த நிலையில் நான்கு சிங்கங்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா மிருகக்காட்சிசாலையில் நான்கு சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது அந்த சிங்கங்களுக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
மனிதர்களைப்போல விலங்குகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வாய்ப்பில்லை என்பதால் விலங்குகளுக்கு மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவும் அச்சம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments