Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேஸ்புக் பயன்படுத்தி கொலை: கொலைகாரர்களை 6 வகையாக பிரிக்கும் ஆய்வாளர்கள்

Webdunia
வியாழன், 6 நவம்பர் 2014 (15:15 IST)
கொலைகாரர்கள் பேஸ்புக்கை பயன்படுத்தி கொலை செய்வதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
பேஸ்புக்கை கொலையாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவது குறித்து ஹோவர்ட் பத்திரிக்கையில் செய்தி வெளிவந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
 
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை பேஸ்புக்கை பயன்படுத்தி உலக அளவில் 48 கொலைகள் நடந்துள்ளது. பேஸ்புக்கை பயன்படுத்தி கொலை செய்பவர்களை ஆய்வாளர்கள் 6 வகையாக பிரித்துள்ளனர்.
 
பேஸ்புக்கில் போட்டிருக்கும் கருத்தை பார்த்து அதை தெரிவித்தவரை நேரில் சந்தித்து தாக்கி கொலை செய்பவர் ஒரு வகை. பேஸ்புக்கை பயன்படுத்தி தான் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது அல்லது கொலை செய்ததை தெரிவிப்பவர் மற்றொரு வகை.
 
பேஸ்புக்கை பயன்படுத்தி தான் கொலை செய்ய திட்டமிட்டுள்ளவரை கண்காணிப்பது, கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் கொலையாளிகள் ஒரு வகை. பேன்டஸியில் வாழ்பவர்கள் தங்கள் பேன்டஸிக்காக பேஸ்புக்கை பயன்படுத்தி யாரையாவது கொலை செய்வது ஒரு வகை.
 
பேஸ்புக்கில் போலி கணக்கு துவங்கி, யாருடனாவது பழகி அவரை நேரில் சந்தித்து கொலை செய்வது ஒரு வகை. பேஸ்புக்கில் வேறு யார் பெயரிலாவது போஸ்ட் போடுவது அல்லது யாரை கொலை செய்ய விரும்புகிறார்களோ அவர்களின் பெயரில் கூட போஸ்ட் போடுவது மற்றொரு வகை என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

Show comments