ஒரே மணி நேரத்தில் 10 ஆயிரம் லைக்ஸ் பெற்ற புகைப்படத்தை நீக்கிய பேஸ்புக்

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2017 (15:28 IST)
தைவான் நாட்டை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை வெளியே எடுக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டது. இந்த புகைப்படத்தை மருத்துவர் ஒருவரே தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்த நிலையில் ஃபேஸ்புக் நிர்வாகம், இந்த புகைப்படம் ஆபாசம் என்று கூறி நீக்கிவிட்டது.
 
தனக்குத்தானே பிரசவம் பார்த்த அந்த பெண்ணின் மன தைரியத்தை பாராட்டுவதற்காகவும், மற்ற கர்ப்பிணி  பெண்களுக்கு இதுவொரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் கருதியே இந்த புகைப்படத்தை தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததாகவும், ஆனால் இந்த புகைப்படத்தை ஆபாசம் என்று கூறி ஃபேஸ்புக் நிர்வாகம் நீக்கியது துரதிஷ்டவசமானது என்றும் இந்த புகைப்படத்தை பதிவு செய்த மருத்துவர் கூறியுள்ளார். 
 
இருப்பினும் இந்த புகைப்படம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார். இந்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் இருந்து நீக்குவதற்கு முன் ஒரே ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் லைக்குகளை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!

நீதிபதி சுவாமிநாதன் பணியில் இருந்து நீக்க நோட்டீஸ்? இந்தியா கூட்டணி திட்டம்?

ஓபிஎஸ்ஐ அடுத்து திடீரென டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. என்ன திட்டம்?

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

அடுத்த கட்டுரையில்