Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2000 ஐ தாண்டியது

Webdunia
ஞாயிறு, 26 ஏப்ரல் 2015 (15:28 IST)
நேபாளத்தில் ஏற்பட்ட  சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2000 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும், கட்டட இடிபாடுகளில் மேலும் ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. 

நேபாள நாட்டின் மையப்பகுதியில் உள்ள லாம்ஜங் மாவட்டத்தில் சனிக்கிழமை நண்பகல் 11.46 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு நீடித்தது. பின்னர், சிறிய அளவிலான கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் 16 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன.
 
இந்த நிலநடுக்கத்தால் நேபாளம் முழுவதும் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்துக்கு 2000 க்கும் மேற்பட்டவர்ள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்புபப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
]
இந்நிலையில் அங்கு இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளன.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments