Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 வயது சிறுமியை பலாத்காரம் செய்தாரா டொனால்ட் டிரம்ப்?: களைகட்டும் அமெரிக்க அதிபர் தேர்தல்!

13 வயது சிறுமியை பலாத்காரம் செய்தாரா டொனால்ட் டிரம்ப்?: களைகட்டும் அமெரிக்க அதிபர் தேர்தல்!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2016 (19:24 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.


 
 
இதில் கருத்துக்கணிப்புகளில் ஹிலாரியின் கை சற்று ஓங்கியுள்ளது. அதிபர் தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்களின் பரப்புரை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனி நபர் விமர்சனம் மிகவும் மோசமாக இருக்கிறது. குறிப்பாக டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சட்டுகள், பெண்களை மதிக்க தெரியாதவர் என குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக வைக்கப்படுகிறது.
 
ஏற்கனவே டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் ரீதியாக தொந்தரவு தந்தார் என இரண்டு பெண்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் கடந்த 1994-ஆம் ஆண்டு 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
 
இந்த புகார்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கொடுக்கப்பட்டுள்ளது என டொனால்ட் டிரம்ப் தனது மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதில் டொனால்ட் டிரம்பின் நிதி ஆலோசகர் ஜெஃப்ரி மீது புகார் கூறப்பட்டுள்ளது. அவரும் அந்த 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த புகாரின் அடிப்படையில் வரும் டிசம்பர் மாதம் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. டொனால்ட் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகளால் ஹிலாரியின் வெற்றி வாய்ப்பு சிறிது சிறிதா அதிகரித்து வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்