Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேன்சரில் இருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்றியது எது தெரியுமா...?

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (17:12 IST)
பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன் புற்றுநோய் இருப்பதாக தெரியவந்தது. இதனால் அவர் மருத்துவமனைக்கு சென்று  சிகிச்சை பெற்று வந்தார். நாள் ஒன்றுக்கு 5 முறை தேனீர் குடித்ததால் தற்போது புற்றுநோயின் தாக்கம் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த 54 வயதான நிக்கோலா பேர்பிரேஸ் என்ற பெண் இது குறித்து கூறியதாவது :
 
’கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எனது இடதுபுற மார்பகத்தில் ஒரு கட்டி இருப்பதை கண்டறிந்தேன். தொடக்கத்தில் அது நீர்க்கட்டி என நினைத்து அசால்டாக இருந்துவிட்டேன். பின்னர் இரு வாரத்தில் அந்தக் கட்டி பெரிதானது. பின்னர் டாக்டரிடம் சென்றபோது இது புற்றுநோய் என்றும் அது மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறினார்கள். 
 
இதனையடுத்து புற்றுநோய் பரவாமல் இருக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது . தொடர்ந்து 6 மாதத்திற்கு கீமோ சிகிச்சை அளிக்கப்பட்டது. நான் படுக்கையில் இருந்த போதும் தினமும் 5 முறி தேனீர் பருகினேன்.
 
அதன்பின் பரிசோதிக்கையில் கட்டியின் அளவு 43 மில்லிமீட்டரிலிருந்து 17 மில்லிமீட்டராக குறைந்திருக்கிறது. இதை மருத்துவர்களும் உறுதி செய்தனர்.
 
புற்று நோய் குறைந்தாலும் 10 வருடம் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக அறிவுறுத்தியுள்ளனர். ’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி.. ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக சந்திக்க திட்டம்..!

கேரள முதல்வர் மகள் மீது லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு.. பதவி விலக வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்..!

மதுரை சித்திரை திருவிழா.. முகூர்த்தக்கால் நட்டு நிகழ்ச்சி தொடக்கம்..!

வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் போராட்டம்!

திருப்பதியில் இருந்து பழனிக்கு நேரடி பஸ் வசதி.. புறப்படும் நேரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments