Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாவூத் இப்ராஹிமின் வசிப்பிடம் எது? பிரிட்டன் நிதி அமைச்சகம் தகவல்

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (05:28 IST)
மும்பை குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியும் உலகமே தேடி கொண்டிருக்கும் தீவிரவாதியுமான தாவூத் இப்ராஹிம் எங்கு தங்கியிருக்கின்றார் என்பது குறித்த ரகசியம் யாருக்கும் தெரியாத நிலையில் அவர் பாகிஸ்தானில் மூன்று முகவரியில் மாறி மாறி தங்கியிருப்பதாகவும், அவருக்கு 21 பெயர்கள் இருப்பதாகவும் பிரிட்டன் நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது



 
 
இந்தியாவின் தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் தாவூத் இப்ராஹிம் தற்போது பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகவும், இந்த விஷயம் பாகிஸ்தான் அரசுக்கு நன்கு தெரியும் என்றாலும் இன்று வரை அதை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது இல்லை என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்து கருத்துகூறியுள்ள பாகிஸ்தான், தங்கள் நாடு என்றைக்குமே தீவிரவாதத்திற்கு எதிரான நாடு என்றும், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை பாகிஸ்தான் போல் உலகில் வேறு எந்த நாடும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
 
கடந்த 1993ஆம் ஆண்டு தாவூத் இப்ராஹிம் நடத்திய மும்பை குண்டுவெடிப்பால் சுமார் 260 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments