Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயரம் குறைந்த ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு, அதிக தள்ளுபடி - சீன உணவகம் அதிரடி

Webdunia
வெள்ளி, 22 மே 2015 (17:27 IST)
உயரம் குறைவான சிறிய அளவிலான ஸ்கர்ட் அணிந்து வருபவர்களுக்கு, அதிக தள்ளுபடி வழங்கப்படும் என்ற அதிரடியான திட்டத்தை சீன உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.
 

 
கிழக்கு சீனா பகுதியில், உள்ள குறிப்பிட்ட உணவகம் ஒன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த உணவகத்திற்கு பெண்கள் அணிந்து வரும் ஆடையை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அளவிடுகிறார்கள். முழங்காலில் இருந்து 3 இன்சு (8 செ.மீ.) உள்ள ஆடை அணிந்திருந்தால் 20 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறார்கள்.
 
அதே சமயம் முழங்காலில் இருந்து 13 இன்சுக்கு (33 செ.மீ.) மேலாக ஸ்கர்ட் அணிந்திருக்கும் பெண்களுக்கு 90 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
 

 
இது குறித்து அந்த உணவகத்தின் நிறுவனர் கூறுகையில், “இது சூடான உணவுப் பொருட்களுக்கு ஏற்ற பருவநிலை கிடையாது. எனவே, நாங்கள் எங்களது முக்கிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்ககாக, பிரச்சார விளம்பரங்களை தொடங்க விரும்பினோம்” என்று கூறியுள்ளார்.
 

 
மேலும் அவர் கூறுகையில், “எங்களது உனவகம் திறக்கப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகிறது. அதனால் ஒவ்வொரு மாதமும் புதுவித விளம்பரத்தை அறிவிக்கிறோம். எனவே நாங்கள், இது போன்ற பிரச்சாரங்கள் மூலம், நல்ல வியாபாரத்தை கொண்டுவர விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments