Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ராணுவத்தினரை கொன்று குவிப்போம்: சீனா மிரட்டல்!!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (17:05 IST)
எல்லை பிரச்சனை காரணமாக இந்தியா சீனா நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் எல்லையில் இரு தரப்பினரும் ராணுவ பலத்தை அதிகரித்துள்ளனர்.


 
 
இந்தியா எல்லையில் உள்ள தனது ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என சீனா மிரட்டி வருகிறது. மேலும், எல்லையில் போர் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
 
மேலும், இந்தியா பலவீனமானது சீனா வலிமையானது, இந்திய அரசியல்வாதிகள் இதை உணர்ந்து கொள்ளாது இருக்கின்றனர் என தெரிவித்து வருகின்றனர்.
 
இந்தியாவின் உயிர் மற்றும் உடமைகளுக்கு பெரும் சேதத்தை சீனா ஏற்படுத்தும் என மிரட்டியுள்ளனர். மேலும், இந்திய ராணுவ வீரர்களுக்கு சீன அரசு மூன்று வாய்ப்புகளை கொடுத்துள்ளது.
 
அவை, ராணுவத்தை திரும்ப பெறுவது, சிறைபிடிப்பு அல்லது கொல்லப்படுவது. மேலும், இந்திய ராணுவத்தை வலுக்கட்டாயமாக வெளியேற்றவும், அவர்களை சிறைபிடிக்கவும், பிரச்சனை வெடித்தால் அவர்களை கொல்லவும் அதிகாரம் உள்ளது என எச்சரித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்.. வீண் விளம்பரம் செய்கிறார் முதல்வர்.. அண்ணாமலை

இன்னொரு பொய் அம்பலம்.. பாகிஸ்தான் தாக்கியதாக சொன்ன இடத்திற்கே சென்ற மோடி..!

லிங்க் கிடைத்தது.. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. 93.60% தேர்ச்சி..!

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்: பொள்ளாச்சி வழக்கு குறித்து விஜய்..!

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவை பார்க்க முடியவில்லை.. மாணவர்கள் குழப்பம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments