Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Webdunia
ஞாயிறு, 23 நவம்பர் 2014 (09:55 IST)
சீனாவின் மேற்கு பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதனால் கட்டிட இடிபாடுகயில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர் 60 பேர் காயமடைந்துள்ளனர்.
 
சிச்சுவான் மாகாணத்தில் உள்ள நகரமான காங்டிங்கிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக சீன புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
 
அப்பகுதியில் இரண்டு வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளதாகவும், மேலும் பல வீடுகள் மற்றும் ஏராளமான கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும், இந்த நிலநடுக்கத்தால் அந்நகரத்தில் உள்ள உள்நாட்டு விமான நிலையமும் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நில நடுக்கத்தில் 70 வயது பெண்மணி உட்பட 2 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 60 பேர் படு காயமடைந்துள்ளதாகவும் சீனவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

Show comments