Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சார கார் விற்பனையில் டெஸ்லாவை பின்னுக்கு தள்ளிய நிறுவனம்.. எலான் மஸ்க் அதிர்ச்சி..!

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2024 (07:38 IST)
சர்வதேச அளவில் எலான் மஸ்க் அவர்களின் டெஸ்லா நிறுவனம் மின்சார கார்களின் விற்பனையில் முதலிடத்தில் இதுவரை இருந்த நிலையில் சீன நிறுவனம் ஒன்று டெஸ்லா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தை விட சீனாவின் பிஒய்டி என்ற நிறுவனம் அதிக மின்சார கார்களை உலகம் முழுவதும் விற்பனை செய்து முதலிடத்தை பிடித்துள்ளது'

ALSO READ: செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றும் நீட்டிக்கப்படுமா? நேரில் ஆஜராக வாய்ப்பு..!

டெஸ்லா நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் 4 லட்சத்து 85 ஆயிரம் மின்சார கார்களை விற்பனை செய்த நிலையில் பிஒய்.டி நிறுவனம் 5 லட்சத்து 26 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது.

மின்சார கார் பயன்பாட்டை சீன அரசு ஊக்குவித்து வருவதோடு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளதால் சீனர்கள் மட்டும் இன்றி உலகம் முழுவதிலும் உள்ள பொதுமக்கள் இந்நிறுவனத்தின் கார்களை வாங்கி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் 2023ஆம் ஆண்டில் டெஸ்லா நிறுவனம் தான் மின்சார கார் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் பிரதமர்.. ஈபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் மூவரும் சந்திக்க அனுமதி இல்லை..!

தமிழகம் மீது அக்கறை இருந்தா.. தமிழ் மண்ணில் இந்த உறுதிமொழியை குடுங்க பிரதமரே! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments