Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை - நியூயார்க் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்.. நடுவானில் ஏற்பட்ட அதிர்ச்சி..!

Siva
திங்கள், 14 அக்டோபர் 2024 (10:14 IST)
மும்பையில் இருந்து நியூயார்க் சென்று கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, உடனடியாக அந்த விமானம் டெல்லிக்கு திருப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று அதிகாலை 4:10 மணிக்கு, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், வெடிகுண்டு மிரட்டல் வந்த விமானம் தரையிறக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் பயணிகள், ஊழியர்கள் அனைவரையும் விமானத்திலிருந்து வெளியேற்றிவிட்டு முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டது எனவும், பரிசோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் கூறியதாவது: "ஏஐ 119 என்ற மும்பை - நியூயார்க் விமானம் சென்று கொண்டிருந்தபோது, நடுவானில் திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், அந்த விமானத்தை டெல்லிக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டது.

இந்த எதிர்பாராத இடையூறினால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்தை குறைக்க எங்கள் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரையாக முக்கியத்துவம் அளித்து, தான் விமானத்தை திருப்ப அறிவுறுத்தப்பட்டதாகவும், இந்த அச்சுறுத்தல் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும்" கூறினார்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments