Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 லட்சம் கார்களை திரும்பப் பெறும் BMW நிறுவனம்: என்ன காரணம்?

Siva
வியாழன், 12 செப்டம்பர் 2024 (07:15 IST)
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான BMW நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்த 15 லட்சம் கார்களை திரும்ப பெற போவதாக அறிவித்துள்ளது.

உயர் ரக கார் பிரியர்கள் BMW கார் மாடல்களை வாங்க போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஜெர்மனி கார் நிறுவனமான BMW அதிரடியாக 15 லட்சம் கார்களை திரும்ப பெற போவதாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் கார் பிரேக்குகளில் கோளாறு அதிகமாக இருப்பதாக புகார் வந்ததை அடுத்து 2022 ஜூன் மற்றும் 2024 ஆகஸ்ட் ஆகிய ஆண்டுகளுக்கு இடையே தயாரிக்கப்பட்ட கார்களை திரும்ப பெறுவதாக நிறுவனம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன

பி.எம்.டபிள்யூ. எக்ஸ்,  மாடல்களான X3 மற்றும் X4, X5 மற்றும் X7 சீரிஸ், ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர், மினிகூப்பர் மற்றும் கண்ட்ரிமேன் ஆகிய கார்களில் பிரேக் கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வகை கார்கள் சுமார் 15.3 லட்சம் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் 12 லட்சம் கார்கள் வாடிக்கையாளரிடமும்,  சுமார் 3,20,000 கார்கள் டீலர் ஸ்டாக்கில் உள்ளதாகவும் தெரிகிறது.

இந்த  15 லட்சம் கார்கள் திரும்பப் பெற முடிவு BMW செய்துள்ளதாகவும் இதுகுறித்த நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments