Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவின் ஆணவத்தை அடக்குவோம்: ஈரான் தலைமை மதகுரு ஆவேசம்

Webdunia
திங்கள், 13 ஜூலை 2015 (21:01 IST)
அமெரிக்காவின் ஆணவத்தை அடக்குவோம் என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கூறினார்.
 
இதுகுறித்து அவர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது, ஆணவத்துக்கு எதிராக ஈரான் எவ்வாறு போராட வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் என்னிடம் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். ஆணவத்துக்கு எதிராகப் போராடுவது புரட்சிகரமான கொள்கைகளில் ஒன்றாகும். அவ்வாறு செய்யவில்லையென்றால் நாம் புனித குரானைப் பின்பற்றுபவர்களாக இருக்க முடியாது. 
 
ஆணவத்துக்கு சிறந்த உதாரணம் அமெரிக்கா. அதன் ஆணவத்தை அடக்குவோம். அதனை எதிர்த்துப் போராடத் தயாராகுங்கள் என்று தெரிவித்துள்ளார். அணு சக்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஈரான், அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் பொருட்டு, அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.
 
ஈரானின் அணு ஆராய்ச்சி தொடர்பாக, மேற்கத்திய நாடுகளுடனான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. இந்நிலையில், ஈரானின் தலைமை மதகுரு அமெரிக்கா குறித்த கருத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

Show comments