Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவுக்கு செல்வோரின் பெயர்களை வெளியிட்ட நாசா.. யார் யார்?

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (09:39 IST)
ஆர்ட்டெமிஸ் 2 என்ற விண்கலத்தின் மூலம் நிலவுக்கு செல்பவர்களின் பெயர்களை நாsஆ சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ஜப்பான் விண்வெளி நிறுவனம் மற்றும் கனடா விண்வெளி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து ஆர்ட்டெமிஸ் 2 என நிலவுக்கு செல்லும் ஆய்வு திட்டத்தை நாசாக கடந்த சில ஆண்டுகளாக வழி நடத்தி வருகிறது. 
 
இந்த ஆர்ட்டெமிஸ் 2 மூலம் 2025 ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1972 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒரு அறிவியல் அற்புதம் நடக்க இருப்பதை அடுத்து இந்த ஆர்ட்டெமிஸ் 2 என்ற விண்கலத்தின் மூலம் நிலவுக்கு செல்ல இருக்கும் நபர்களின் பெயர்களை நாசா முதல் முதலாக வெளியிட்டுள்ளது. 
 
ஜெர்மி ஹேன்சன், விக்டர் க்ளோவர், ரீட்வைஸ்மேன், கிறிஸ்டினா ஹம்மாக் கோச் ஆகிய ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் நிலவு சுற்று பாதைக்கு சென்று திரும்புவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்ட்டெமிஸ் ஒன் திட்டம் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பணியில் நாசா ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments