Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதாவுக்கு அர்னால்டு கடிதம் - தமது அமைப்பில் சேருமாறு அழைப்பு

ஜெயலலிதாவுக்கு அர்னால்டு கடிதம் - தமது அமைப்பில் சேருமாறு அழைப்பு
, புதன், 24 செப்டம்பர் 2014 (17:31 IST)
ஹாலிவுட்டின் முன்னாள் நடிகரும் கலிபோர்னியா மாகாண ஆளுநருமான அர்னால்டு ஷ்வாஸ்நேகர், தான் தொடங்கிய அமைப்பில் இணையுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 
அண்மையில் நடந்த ஐ படத்தின் பாடல்கள் வெளியீட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்னை வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, மரியாதை நிமித்தமாகத் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து உரையாடினார். அதைத் தொடர்ந்து, இப்போது இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். 
 
இக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:
 
நான் சென்னை வந்தபோது எனக்கு சிறப்பான பாதுகாப்பு வசதி செய்து தந்ததற்கும், என்னை சந்திக்க நேரம் ஒதுக்கியதற்கும் உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடன் அமர்ந்து நீங்கள் சந்தித்த சவால்கள் பற்றியும் உங்களது சாதனைகள் குறித்தும் விவாதித்தது அருமையான சந்தர்ப்பமாக அமைந்தது. 
 
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நீங்கள் செய்துவரும் சேவை என் மனத்தைத் தொட்டது. தமிழக மக்கள் உங்களை அம்மா என்று அழைப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. அனைத்து மகளிர் காவல் நிலையம் என்பது மிகவும் சிறப்பான திட்டம். இதுபோன்ற செய்தியை நான் எங்கும் கேட்டதுகூட இல்லை. இந்தியாவின் காற்றாலை மின்சார உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 39 சதவிகிதம் என்ற வகையில், இது நிச்சயம் நீங்கள் பெருமை கொள்ள வேண்டிய செய்தி.
 
நான்கு வருடங்களுக்கு முன் நான் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கென ஆர் 20 என்ற அமைப்பை உருவாக்கினேன். அது, மாசில்லாத எரிசக்தியைப் பயன்படுத்துவதில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசுகளுடன் இணைந்து பணியாற்றுகிறது. எனது இந்த முயற்சியில் 560 நகரங்களும் பல்வேறு மாகாணங்களும் இணைந்துள்ளன. தமிழ்நாடு, இதில் இணைவது மிகப் பொருத்தமானது. எங்களுடன் நீங்களும் இணைந்து செயல்பட அழைக்கிறேன். இது தொடர்பாக, என் அதிகாரிகள் உங்கள் சுற்றுச்சூழல் துறை அமைச்சரைத் தொடர்பு கொள்வார்கள். 
 
நம் மாநிலத்தில் உள்ள காற்று மண்டலத்தை நாம் சுத்தமாக வைத்தால் மட்டும் போதாது. நீங்கள் தமிழ்நாட்டில் செய்துள்ளது போல், நாங்கள் கலிபோர்னியாவில் செய்துள்ளது போல், இதர பகுதிகளும் நம்மைப் பார்த்துத் தாக்கம் பெற வேண்டும். அந்தப் பொறுப்பும் நமக்கு உண்டு என்பதை மறக்கக் கூடாது. இதுபோன்ற தொடர்புகள், நாம் தொடர்ந்து சந்திக்க, கூடுதல் வாய்ப்புகளைத் தரும். அதைத்தான் நான் பெரிதும் விரும்புகிறேன். மீண்டும் நன்றி. உங்களது சிறப்பான பணிகள் தொடர வாழ்த்துகள்.
 
இவ்வாறு அர்னால்டு ஷ்வாஸ்நேகர் கூறியுள்ளார்.

அர்னால்டு எழுதிய கடிதத்தின் அசல் வடிவம், அடுத்த பக்கத்தில்.

அர்னால்டு எழுதிய கடிதத்தின் அசல் வடிவம் இங்கே:

webdunia


Share this Story:

Follow Webdunia tamil