Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரபுநாட்டில் தவிக்கும் தமிழக மீனவர்களை காப்பாற்ற மோடி முன்வரவேண்டும்: வைகோ

அரபுநாட்டில் தவிக்கும் தமிழக மீனவர்களை காப்பாற்ற மோடி முன்வரவேண்டும்: வைகோ

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2016 (06:01 IST)
அரபுநாட்டில் தவிக்கும் 23 தமிழக மீனவர்களை காப்பாற்ற பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து,  மதிமுக தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பிழைப்புக்காக 23 மீனவர்கள் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள அஜ்மன் நகருக்குச் சென்றுள்ளனர்.
 
அங்கு, அவர்கள் கடுமையான உழைப்போடு பொருளீட்டி தங்களையும், தங்கள் குடும்பத்தினரின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு இன்னல்களைக் கடந்து கனவுகளோடு சென்றவர்களின் வாழ்வில் இடி விழுந்துள்ளது.
 
அரபு நாடுகள் சட்டப்படி மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள், அரபு நாட்டைச் சார்ந்த 2 மீனவர்கள் கடந்த 2014 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் தேதி அன்று தங்களுடன் அழைத்துச் சென்றனர். எதிர்பாராத விதமாக ஏப்ரல் 14 ஆம் தேதியே  அன்று இரவில் மீனவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது அரபு நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் காணாமல் போய்விட்டார்.
 
அந்த நாட்டு சட்டப்படி தமிழ்நாட்டை சேர்ந்த 23 மீனவர்களையும் கைது செய்து விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் இரக்கமில்லாமல் தாக்கப்பட்டு, விசாரணையின் முடிவில் அவர்கள் அப்பாவிகள் என்று முடிவு செய்து வழக்கில் சாட்சிகளாக மட்டும் சேர்க்கப்பட்டார்கள். காவல்துறையின் நடவடிக்கையால் மீனவர்கள் அனைவரும் தங்கள் வேலையை இழந்தனர். பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.
 
உண்ண உணவின்றி, உடையின்றி, வேலையின்றி, செலவுக்குப் பணமின்றி வீட்டு காவலில் வைத்துள்ளதுபோல அவர்கள் வைக்கப்பட்டுள்ளார்கள் என்று கடல் கடந்து வாழும் நமது தமிழர்கள் ஸ்டாலின் பீட்டர் என்பவர் மூலமாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கிடைத்தது.
 
கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் தவித்து வரும் அவர்களை காப்பாற்ற பிரதமர் நரேந்திர மோடியும்,  வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்-ம் மனிதாபிமானத்தோடு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்த வேண்டுகோளை ஒரு கடிதமாக பிரதமர் நரேந்திர மோடியும்,  வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்-கும் வைகோ அனுப்பியுள்ளார். 

10 நாளில் பரோட்டா மாஸ்டர் ஆவது எப்படி? மதுரையில் இப்படி ஒரு பயிற்சி பள்ளியா?

பிரியங்கா காந்தி மகளுக்கு ரூ.3000 கோடி சொத்துக்கள் உள்ளதா? வழக்குப்பதிவு செய்த காவல்துறை..!

ஒரே மொபைலில் 1000 சிம்கார்டுகள்.. 18 லட்சம் சிம்கார்டுகளை முடக்க திட்டமா?

பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு.. ரூ.823 கோடியில் அமைக்க திட்டம்..!

18,000 ரூபாய்க்கு சோனி கேமிராவா? வேற லெவல் ஆப்சனில் வெளியான விவோ Y200 GT 5G ஸ்மார்ட்போன்!

Show comments