Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இம்ரான்கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது மேலும் புதிய வழக்குப் பதிவு

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (22:55 IST)
இம்ரான்கான் ஆதரவாளர்கள் போலீஸாரை தாக்கியது தொடர்பாக பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கீழ் தனித்தனியாக வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில், பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான  ஆட்சி நடந்து வருகிறது.   கடந்தாண்டு முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக ஏப்ரல் மாதம் சுமார் 70 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு   நிலுவையிலுள்ளன.

இந்த நிலையில்,  கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம்தேதி நடந்த பிரமாண்ட பேரணியின்போது,  பாகிஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெபா சவுத்ரி மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த வழக்கு விசாரணையில் இம்ரான்கான் தொடர்ந்து ஆஜராகாமல் உள்ளார்.

நேற்று அவரைக் கைது செய்யும்  முயற்சியில் போலீஸார் இறங்கினர். இதுபற்றி அறிந்துகொண்டு அவர் வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, போலீஸாருக்கும், இம்ரான்கான் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில்,போலீஸார் காயமடைந்தனர்.

இதற்கிடையே இம்ரான்கானை கைது செய்ய  லாசூர் நீதிமன்றம் இடைக்கால விதித்துள்ள நிலையில், நேற்று இம்ரான்கான் ஆதரவாளர்கள் போலீஸாரை தாக்கியது தொடர்பாக பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கீழ் தனித்தனியாக வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

நேற்று நடந்த மோதல் தொடர்பாக 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments