Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாகசம் செய்ய நினைத்தவருக்கு நேர்ந்த சோகம்

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (14:41 IST)
சீனாவில் 62 மாடி கட்டிடத்தில் சாகசம் செய்ய முயன்ற வாலிபர் தவறி விழுந்து மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி வாசிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
சீனாவின் சூப்பர்மேன் என அழைக்கபடும்  வு யாங்கிங் என்ற வாலிபர் உயரமான கட்டிடங்களின் மீது ஏறி சாகசங்கள் செய்து அதனை வீடியோ எடுத்து சீன இணையதளங்களில் பதிவு செய்து வந்தார். ஆனால் அந்த சாகசமே அவரின் மரணத்திர்கு காரணமாக அமைந்தது வேதனைக்குரிய விஷயமாகும்.
 
யாங்கிங் சாகசம் செய்வதற்காக சீனாவில் உள்ள 62 மாடி கட்டிடத்தின் மாடியில் மேல் ஏறி  தயாரானார். யாங்கிங்கின் சாகசத்தை வீடியோ எடுக்க அனைவரும் தயாராக இருந்தனர். அவர் மாடியில் புல்-அப் செய்தவாறே இரண்டு கால்களையும் கீழே தொங்கவிட்டு கைகளால் கட்டிடத்தை பிடித்திருந்தார். திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்த யாங்கிங் கை நழுவி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 
 
சாகசம் செய்ய முயன்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments