Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய, சீன எல்லையில் மோதல்: களத்தில் இறங்கிய அமெரிக்கா!

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (07:12 IST)
இந்திய சீன எல்லையில் நேற்று முன்தினம் இரவு நடந்த இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையிலான மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பதும் 43 சீன வீரர்கள் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த இந்த மோதல் குறித்து அமெரிக்கா முதல் முதலாக மௌனம் கலைத்து தனது கருத்தை தெரிவித்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்திய-சீன பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் தற்போது மோதல் முற்றி இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா தனது கருத்தை கூறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டால் அவர்களிடையே பேசி சமாதானம் செய்ய தயார் என்று கூறியுள்ள அமெரிக்க அரசு தற்போது இந்திய சீன எல்லையில் நடைபெற்றுவரும் மோதலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இரு நாடுகளுக்கு இடையிலான மோதலில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
 
மேலும் இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர்களது குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் கூறியுள்ள அமெரிக்க அரசு, இந்த பிரச்சனையை எப்படியாவது இரண்டு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. மேலும் இரு நாட்டுப் படைகளும் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் வாங்கி இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்றும் அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே கடந்த ஜூன் இரண்டாம் தேதி பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசியபோது சீன எல்லை பிரச்சனை குறித்தும் பேசி உள்ளார்கள் என்றும் அமெரிக்க அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழை பாதிப்பால் 10,11,12 வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு ஒத்திவைப்பா? அமைச்சர் அன்பில் மகேஷ்..!

இந்திய பிரதமர் மோடியுடன் எனக்கு கருத்துவேறுபாடு உள்ளது: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் அசாத்திய சாதனை - ஒரே மாதத்தில் 15.23 லட்சம் மரக்கன்றுகள் நடவு!

செந்தில் பாலாஜி அமைச்சரானதில் அவசரம் காட்டினோமா? சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம்..!

கிருஷ்ணகிரியிலும் உருண்டு வந்த பாறை.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments