Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கான நிதியை நிறுத்தியது அமெரிக்கா: நாடாளுமன்றம் ஒப்புதல்

Webdunia
ஞாயிறு, 8 மே 2016 (11:08 IST)
பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா வழங்க இருந்த 450 மில்லியன் டாலர் நிதிக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் அதனை தற்போது நிறுத்தியுள்ளது அமெரிக்கா.


 
 
பாகிஸ்தானில் இயங்கி வரும் ஹக்கானி தீவிரவாதிகளை ஒடுக்குவதாக பாகிஸ்தான் அரசு உறுதி அளித்திருந்தது. கொடுத்த வாக்குறுதியின் படி பாகிஸ்தான் ஹக்கானி தீவிரவாதிகளை ஒடுக்காததால் அதிருப்தி அடைந்த அமெரிக்கா இந்த நிதியை வழங்க மறுத்துள்ளது.
 
பாகிஸ்தானுக்கு நிதி வழங்க ஆட்சேபம் எழுந்ததையடுத்து, பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவதை தடுக்கும் மசோதாவுக்கு அமெரிக்க பாராளுமன்ற குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
 
ஏற்கனவே வழங்க இருந்த 8 எஃப்-16 ரக போர் விமானங்களும் அமெரிக்க எம்பிக்களின் ஆட்சேபத்தால் தடைபட்டுள்ளது. இந்நிலையில் 450 மில்லியன் டாலர் நிதியும் தடைபட்டுள்ளதால் பாகிஸ்தான் அரசு கடும் அதிர்ச்சியில் உள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments