Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்: படுக்கைக்காக காத்திருக்கும் அவலம்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (16:23 IST)
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் தினமும் லட்சக்கணக்கானவர்களுக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன 
 
இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
தீவிர சிகிச்சை பிரிவில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்காவில் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது அமெரிக்காவில் மூன்றாவது அலை தலைவிரித்து ஆடுகிறது என்பது போல் தோன்றுகிறது 
 
அமெரிக்கா மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் கொரோனா முதல், இரண்டாவது அலைபோல் மூன்றாவது அலை மிகப்பெரிய அளவில் வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம். முதல்வர் உத்தரவு..!

கும்பமேளா கும்பலால் வாரணாசியில் சிக்கிய தமிழக வீரர்கள்! உதயநிதி எடுத்த உடனடி நடவடிக்கை!

கொசுவை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் சன்மானம்! - பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments