Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் வழங்க அமெரிக்கா உறுதி

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் வழங்க அமெரிக்கா உறுதி

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2016 (10:58 IST)
இந்தியாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் வழங்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டது.


 
 
பாகிஸ்தானுக்கு எட்டு F-16 ரக போர் விமானங்கள் வழங்க அமெரிக்கா அன்மையில் முடிவெடுத்தது. இதனை இந்தியா கடுமையாக எதிர்த்தது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சார்டு வர்மாவையும் நேரில் அழைத்து இந்தியாவின் எதிர்ப்பை தெரிவித்தார் வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெயசங்கர்.
 
ஆனால் தற்போது அமெரிக்கா இந்தியாவின் எதிர்ப்பு எதையும் கண்டுகொள்ளாமல் பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் விற்பனை செய்வதை உறுதி செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை அமெரிக்காவின் கூட்டாட்சி பதிவேட்டில் வெளிடப்பட்டுள்ளது.
 
அமெரிக்க வெளியுறவு கொள்கை நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் தெற்கு ஆசிய பகுதியில் போர்த்திறம் சார்ந்த கூட்டாளியின் வேண்டுகோளை ஏற்று அவர்களது தேசிய பாதுகாப்பை மேம்படுத்த இந்த போர் விமானங்கள் விற்பனை செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் - வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேச்சு...

மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி கொலை செய்த மாமனார்: என்ன காரணம்?

லேப்டாப்பில் சார்ஜ் போட்ட பெண் மருத்துவர் பரிதாப பலி.. கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

நான் பொறுப்பேற்ற போது தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமாக இருந்தது: ஆளுநர் ரவி

முஸ்லீம் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது: யோகி ஆதித்யநாத்

Show comments